×

வெந்நீரில் விழுந்த குழந்தை பலி

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பன்பாக்கம் ஊராட்சி குத்தானமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (32). இவரது மனைவி மீனா (27). இவர்களுக்கு ஷர்வின் என்ற 4 வயது ஆண் குழந்தை உள்ளது.  மீனா கடந்த 29ம் தேதி குளிப்பதற்காக அடுப்பில் வெந்நீரை வைத்திருந்தார். ஷர்வின் எதிர்பாராதவிதமாக அதில் விழுந்தான். இதில், அவனது மார்பில் வெந்நீர் பட்டு அலறித்துடித்தான்.

இதனை கண்ட பெற்றோர் அவனை சென்னையில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். தொடர்ந்து சுமார் ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வந்தான். இதனையடுத்து, ஷர்வின் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து, கவரப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags : Baby , Baby killed after falling into hot water
× RELATED கோவையில் குப்பைத் தொட்டியில் கிடந்த பச்சிளம் பெண் குழந்தை