×

முதியவரிடம் வழிப்பறி

ஆவடி: அண்ணனூர் ஜோதி நகர் கோதாவரி தெருவை சேர்ந்தவர் வாசுதேவன் (66). ஓய்வுபெற்ற தனியார் கம்பெனி ஊழியர். நேற்று முன்தினம் வாசுதேவன் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பூஜை செய்வதற்காக மா இலையை பறிக்க வீட்டில் இருந்து புறப்பட்டார். அண்ணனூர் ரயில்வே குடியிருப்பு மின்சார வாரிய அலுவலகம் அருகில் உள்ள மா மரத்தில் இலைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த வாலிபர் வாசுதேவனிடம் தங்கச்சங்கிலி, பணத்தை கேட்டார்.

அப்போது, அவர் கொடுக்க மறுத்ததால் வாசுதேவனை கத்தி முனையில் மிரட்டி அவரிடமிருந்து ஒன்றரை சவரன் தங்கச்சங்கிலி மற்றும் ₹6 ஆயிரத்தை பறித்து கொண்டு அந்த வாலிபர் அங்கிருந்து தப்பினார். இதுகுறித்து, புகாரின்பேரில் திருமுல்லைவாயல் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்தப்பகுதி கண்காணிப்பு கேமரா மூலமாக வழிப்பறி செய்த வாலிபரை தேடி வருகின்றனர்.

Tags : Sew to the old man
× RELATED சிறுமிக்கு பாலியல் தொந்தரவு போக்சோவில் வாலிபர் கைது