×

திமுக இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர்: திருமழிசை பேரூராட்சியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர், பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி ஆகியோர் ஆலோசனையின்பேரில் இணையதளத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பேரூர் திமுக செயலாளர் தி.வே.முனுசாமி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் மு.திருநாவுக்கரசு,  ஜெ.மகாதேவன், தி.கோ.செல்வம், பி.அருள், மு.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மு.சுரேந்தர் வரவேற்றார். மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் ஏ.ஜே.பவுல் இணையதளத்தில் உறுப்பினர் சேர்க்கையை தொடங்கி வைத்து இளைஞரணி உறுப்பினர் அட்டையை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட நெசவாளர் அணி துணை அமைப்பாளர் உ.வடிவேலு, ஆர்.கருணாநிதி, கே.பாஸ்கர், எஸ்.இளங்கோ, எஸ்.கோபால், ஏ.சதிஷ், வி.தமோதரன், எம்.சங்கர், கே.கங்கா, எஸ்.ஜான், ஜெயகுரு, ஜி.நாகராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். திருநின்றவூர்: திருநின்றவூர் பேரூராட்சியில் திருவள்ளூர் தெற்கு மாவட்ட செயலாளர் ஆவடி சா.மு.நாசர் ஆலோசனையின்பேரில் இணையதளத்தில் உறுப்பினர்கள் சேர்க்கை முகாம் மற்றும் இளைஞரணி உறுப்பினர் அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், பேரூர் செயலாளர் தி.வை.ரவி தலைமை வகித்தார். முன்னதாக பேரூர் இளைஞரணி அமைப்பாளர் சசிகுமார், துணை அமைப்பாளர் நந்தகுமார் ஆகியோர் வரவேற்றனர்.

இணையம் மூலம்  உறுப்பினர் சேர்க்கையை மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் மோதிலால் தொடங்கிவைத்து புதியதாக சேர்ந்த இளைஞர்களுக்கு இளைஞரணி உறுப்பினர் அட்டைகளை வழங்கினார். இதில், நிர்வாகிகள் கமலக்கண்ணன், நாகராஜ், ரவி, சுரேஷ்குமார், பாபு, அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : DMK , DMK Youth Membership Card Presentation Program
× RELATED நெல்லியாளம் நகராட்சி நிர்வாகத்தை...