×

கொரோனா காரணமாக மூடப்பட்ட மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை மீண்டும் திறக்க வேண்டும்: அரசுக்கு நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் கொரோனா காரணமாக மூடப்பட்ட சுற்றுலா தலத்தை திறக்க வேண்டும் என தமிழக அரசுக்கு நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் ஓரளவு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், பெரும்பாலான சுற்றுலாத்தலங்கள் இன்னும் திறக்கப்படவில்லை. இந்நிலையில், மாமல்லபுரத்தில் உள்ள உலக புகழ் வாய்ந்த சுற்றுலா தலத்தை திறக்க வேண்டுமென நடைபாதை வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மாமல்லபுரத்தில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக தெரிந்த சுற்றுலா தலம் தற்போது கொரோனா வைரஸ் காரணமாக கடந்த 6 மாதங்களாக மூடியே காணப்படுகிறது.

மேலும், மாமல்லபுரத்தின் முக்கிய சுற்றுலா தலமான வெண்ணெய் உருண்டைபாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் ஆகியவை அனைத்து தரப்பினராலும் கவரக்கூடிய சுற்றுலா தலமாக திகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே, சுற்றுலா பயணிகளையே நம்பி இருந்த வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. தமிழக அரசு நடைபாதை வியாபாரிகளின் நலனை கருத்தில் கொண்டு உடனடியாக சுற்றுலா தலத்தை திறக்க வேண்டுமென நடை பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து நடை பாதை வியாபாரிகள் கூறுகையில், ‘மாமல்லபுரத்திற்கு ஆண்டுதோறும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் ஏராளமானோர் வந்து செல்வார்கள்.

இந்நிலையில், கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் 16ம் தேதி அனைத்து புராதன சின்னங்களுக்கும் தொல்லியல் துறையினரால் பூட்டு போட்டு மூடப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளையே நம்பி இருந்த நடை பாதை வியாபாரிகள் தங்கள் வாழ்வாதாரம் இழந்து கடுமையாக பாதிக்கப்பட்டனர். எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மாமல்லபுரம் சுற்றுலா தலத்தை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென நடை பாதை வியாபாரிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags : tourist site ,Mamallapuram ,government ,traders , Mamallapuram tourist site closed due to corona should be reopened: Pedestrian traders demand govt
× RELATED மாமல்லபுரத்தில் சிற்பக்கலை கல்லூரி...