×

ஊட்டச்சத்து மாத விழா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் வட்டாரம்  ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில் வருடந்தோறும் நடைபெறும் போஷன் மா ஊட்டச்சத்து மாத விழா குன்றத்தூர் ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்ட அலுவலர் .க. பானுமதி தலைமையில் நடைபெற்றது. ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் குன்றத்தூர் வட்டாரத்திற்கு உட்பட்ட  கொருக்கந்தாங்கல் அங்கன்வாடி மையத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு மாதம் குத்துவிளக்கேற்றி கொண்டாடப்பட்டது.

இவ்விழா கடந்த வாரம் 7ம் தேதி துவங்கப்பட்டு குன்றத்தூர் ஒன்றியத்திலுள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் போஷன் மா ஊட்டச்சத்து மாத விழா நடைபெறுகிறது. இதில் வளர்இளம் பெண்கள் , கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் பெண்களுக்கான ஊட்டச்சத்து நிறைந்த காய்கறி, பழங்கள், தானிய வகைகள், கீரைகள் உள்ளிட்டவைகளை உட் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இவ்விழாவில் ஊட்டச்சத்து விழிப்புணர்வுக்கான உறுதி மொழி எடுக்கப்பட்டது.

Tags : Nutrition Month Festival , Nutrition Month Festival
× RELATED தேசிய ஊட்டச்சத்து மாத விழா