மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கவுதம்குமார் மறைவு: முதல்வர் இரங்கல்

சென்னை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கவுதம் குமார் மறைவிற்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் வெளியிட்ட இரங்கல் அறிக்கை: தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய உறுப்பினர் கவுதம் குமார் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி கடந்த 18ம் தேதியன்று காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை

அடைந்தேன். கவுதம் குமாரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories:

>