×

கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் தமிழக எல்லை வந்தது: பூண்டி ஏரிக்கு இன்று வருகிறது

சென்னை : கண்டலேறு அணையில் இருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணா நீர் நேற்றிரவு தமிழக எல்லை வந்தடைந்தது. கண்டலேறு அணையில் இருந்து கடந்த 19ம் தேதி காலை 9 மணியளவில் 1,500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் இன்று தமிழகத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஆந்திரா மற்றும் தமிழக எல்லை பகுதிகளில் பெய்த மழை காரணமாக நேற்றிரவு தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட்டிற்கு வந்தடைந்தது. ஆரம்பத்தில் 20 கன அடி வீதம் தண்ணீர் வந்த நிலையில் படிப்படியாக 200 கன அடியாக அதிகரித்தது. இந்த தண்ணீர் இன்று காலை பூண்டி ஏரிக்கு வந்தடைகிறது. இந்த தவணை காலத்தில் 4 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது.  இந்தாண்டில் தமிழகத்துக்கு வழங்க வேண்டிய 12 டிஎம்சி நீரினை பெற தமிழக அரசால் தொடர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று சென்னை மண்டல நீர்வளப்பிரிவு தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்தார்.


Tags : Krishna ,dam ,border ,Kandaleru ,lake ,Tamil Nadu , Krishna water released from Kandaleru dam came to the Tamil Nadu border: it is coming to Boondi lake today
× RELATED உப்பாறு அணைக்கு தண்ணீர் திறக்க வேண்டும்