×

சுற்றுலா பயணிகள் வருகையின்றி பூங்காக்கள் வெறிச்சோடியது

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, தேயிலை பூங்கா, குன்னூர் சிம்ஸ்பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவைகள் உள்ளன. இவற்றை நீலகிரிக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் பார்த்து ரசிப்பது வழக்கம். இந்நிலையில் கொேரானா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் மூடப்பட்டிருந்த இப்பூங்காக்கள் கடந்த 9ம் தேதி முதல் திறக்கப்பட்டுள்ளன.

இ-பாஸ் நடைமுறையில் உள்ளதால், அதில் உள்ள டூரிசம் நடைமுறையை பின்பற்றி விண்ணப்பிக்கும் சுற்றுலா பயணிகளுக்கு கட்டுப்பாடுகளுடன் குறைந்த அளவிலானோரே அனுமதிக்கப்படுகின்றனர். இதனால் பூங்காக்களில் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. குறிப்பாக ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள மரவியல் பூங்கா, கோத்தகிரி சாலையில் உள்ள தேயிலை பூங்கா, காட்டேரி பூங்கா ஆகியவற்றிற்கு மிகவும் சொற்ப அளவிலான சுற்றுலா பயணிகளே வந்துள்ளனர். இதனால் இப்பூங்காக்கள் வெறிச்சோடி காட்சியளிக்கின்றன.

Tags : parks ,arrival , The parks were deserted without the arrival of tourists
× RELATED ராமநாதபுரம் மாவட்டத்தில் 10 இடங்களில் கைத்தறி பூங்கா