×

10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை ஐகோர்ட் மீண்டும் மறுப்பு; திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என அறிவிப்பு

சென்னை: 10-ம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான தேர்வுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. மாற்றுத் திறனாளிகள் வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் யாருக்கும் தொற்று இல்லை என்று அரசு தெரிவித்த நிலையில் மாற்றுத் திறனாளிகள் தேர்வர்களை தேர்ச்சி பெற்றதாக அறிவிக்க வேண்டும் என்பதை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதில் இருந்து பள்ளிகள் திறக்கப்படவில்லை. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் மூலம் பாடங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

மேலும் தமிழகத்தில் நடைபெற இருந்து பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் தனித்தேர்வர்களுக்கு செப்டம்பர் 21-ஆம் தேதி முதல் தேர்வு நடத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது. இது சம்பந்தமாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய செய்து தனித்தேர்வு எழுதும் அனைத்து மாற்றுத்திறனாளி மாணவர்களும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த போது மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு வீடுகளுக்கே சென்று கொரோனா பரிசோதனை செய்ததில் மாணவர்கள் யாருக்கும் தொற்று இல்லை எனவும் அரசுத்தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. இதை ஏற்ற நீதிமன்றம் பத்தாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்குகான தேர்வுக்கு தடைவிதிக்க மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும் நாளை திட்டமிட்டபடி தேர்வு நடைபெறும் என தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு நடத்திய விதம் குறித்து 8 வாரங்களுக்குள் பதில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags : Chennai iCourt ,examination , Chennai iCourt again refuses to ban examination for Class 10 individual candidates; Notice that the examination will be held as scheduled
× RELATED ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன் மீதான...