×

பொன்னேரி அருகே அரசு நிலம் மீட்பு

பொன்னேரி: பொன்னேரி அருகே தனியாரால் ஆக்கிரமிக்கப்பட்ட அரசு நிலத்தை அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். பொன்னேரியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் பெரியக்காவணம்  கிராமத்தில்  1 ஏக்கர் 18 சென்ட் அரசு நிலத்தை ஆக்கிரமித்து தொடர்ந்து பயிர் செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த 2009ம் ஆண்டு பர்மா அகதிகள் மறுவாழ்வு நல சங்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் பர்மா அகதிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கிய வீட்டு மனையை பொன்னேரியை சேர்ந்த ஆனந்தன் என்பவர் சட்டவிரோதமாக கையகப்படுத்தி மதில் சுவர் கட்டியுள்ளதாக கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு  சென்னை உயர் நீதிமன்றம் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது. அதன்படி பொன்னேரி வருவாய்த்துறை அதிகாரி மணிகண்டன், வருவாய்த்துறை அதிகாரிகள், பொன்னேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் ஆகியோர் தலைமையில்  போலீசார் சர்ச்சைக்குரிய இடத்தில் எழுப்பப்பட்டிருந்த மதில் சுவரை பொக்லைன் இயந்திரம் மூலம் அகற்றினர். இதனைத்தொடர்ந்து ஒன்றே முக்கால் கோடி  மதிப்பிலான அரசு நிலத்தை  அதிகாரிகள் அதிரடியாக மீட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Ponneri , Government land recovery near Ponneri
× RELATED பொன்னேரி அருகே கிராம மக்கள் தேர்தல் புறக்கணிப்பு