×

சில்லி பாயின்ட்...

* சென்னை - மும்பை போட்டி தொடங்குவதற்கு முன்பாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் கிரிக்கெட் வாரியத் தலைவர் அப்துல் ரகுமான் புகாதிர், பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி, செயலர் ஜெய் ஷா உட்பட அனைவரையும் வரவேற்றார்.
* வண்ணமயமான தொடக்க விழா இல்லாததால், ஐபிஎல் தொடரின் 13வது சீசன் அமைதியாகத் தொடங்கியது. கேலரியில் முக்கிய பிரமுகர்கள் சமூக இடைவெளியுடன் முகக்கவசம் அணிந்து அமர்ந்திருந்தனர்.
* டுவைன் பிராவோ முழு உடல்தகுதியுடன் இல்லாததால் சென்னை அணியில் இடம் பெறவில்லை.
* ஐபிஎல் 2020 தொடரின் முதலாவது பந்தை சிஎஸ்கே வேகம் தீபக் சாஹர் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோகித் ஷர்மா பவுண்டரி விளாசி அசத்தினார்.
* ஸ்டேடியத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படாததால், வீரர்களை உற்சாகப்படுத்தும் வகையில் ரசிகர்களின் கைத்தட்டல் மற்றும் ஆரவார கூக்குரலின் ஒலிப்பதிவு அவ்வப்போது அரங்கை அதிரவைத்தது.

Tags : Roulette Point ...
× RELATED சில்லி பாய்ன்ட்...