×

கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் விவகாரம்; தனியார் மருத்துவமனைகளில் 50% ஐசியூ படுக்கைகள் அதிகம்: அரசு மருத்துவமனையில் குறைவாக இருப்பதால் பொதுமக்கள் தனியாரிடம் செல்லும் அவலம்

சென்னை: கொரேனா சிகிச்சைக்காக தமிழகத்தில் உள்ள மொத்த ஐசியூ படுக்கைகளில் 50 சதவீத படுக்கைகள் தனியார் மருத்துவமனைகளில் தான் உள்ளது. இதனால் தான் ெபாதுமக்கள் சீரியஸான ெகாரோனா நோயாளிகளை அரசு மருத்துவமனைக்கு கொண்டு வராமல் தனியார் மருத்துவமனையில் சேர்ப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 6 ஆயிரத்திற்கும் கீழ் இருந்து வருகிறது. தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு 5,30,908. தற்போது 46, 506 பேர் மட்டுமே சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான படுக்கை வசதிகளை அதிகரிக்க வேண்டும் என்று மருத்து நிபுணர்கள் தெரிவித்துவருகின்றனர்.

குறிப்பாக ஆக்ஸிஜன் மற்றும் ஐசியூ பிரிவு படுக்கை எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தொற்று நோய் நிபுணர்கள் தொடர்ந்து கூறிவருகின்றனர். இதன்படி தமிழக அரசு கொரோனா படுக்கைகளை அதிகரித்து வந்தாலும் அரசு மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகள் குறைவாக உள்ளது தெரியவந்துள்ளது. மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்களின்படி தமிழகத்தில் பெரிய ,சிறிய, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கோவிட் கேர் என்றும மொத்தம் 1,259 கொரோனா சிகிச்சை மையங்கள் செயல்பட்டுவருகிறது. இந்த மருத்துவமனைகளில் 1,91,303 படுக்கைகள் உள்ளது. இதில் 25,407 படுக்கைகள் ஆக்ஸிஜன் வசதி உள்ளவை. இதைத்தவிர்த்து 8,439 ஐசியூ படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதில் அரசு மருத்துவமனைகளில் மட்டும் 3,595 உள்ளது. மீதம் உள்ள 4,844 ஐசியூ படுக்கைகள் தனியார் மருத்துமனைகளில்தான் உள்ளது. இதைப்போன்று தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 2,134 வென்டிலேட்டர்கள் உள்ளது. 2,118 வென்டிலேட்டர்கள் தனியார் மருத்துவமனைகள் வசம் உள்ளது. இதனால் தான் கடுமையான பாதிப்பு உள்ள கொரோனா நோயாளிகள் அவசர சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைகளை நாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இது தொடர்பாக மருத்துவ நிபுணர்கள் சிலர் கூறியதாவது: ஐசியூ மற்றும் ஆக்ஸிஜன் வசதி கொண்டு படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தால் மட்டுமே கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஆபத்தான நிலையில் உள்ளவர்களின் உயிரை காப்பாற்ற முடியும்.

கொரோனா தொற்றால் ஆக்ஸிஜன் அளவு குறைந்து உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பது தெரிந்தவுடன் ஆக்ஸிஜன் வசதி கொண்டு படுக்கைகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்பட்டது. தற்போது 25 ஆயிரம் ஆக்ஸிஜன் படுக்கைகள் உள்ளது. ஆனால் 9 ஆயிரம் ஐசியூ படுக்கைகள் மட்டும் உள்ளது. எனவே அரசு மருத்துவமனைகளில் ஐசியூ படுக்கைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : hospitals ,public ,ICU , The issue of treating the corona; 50% of ICU beds in private hospitals are high: It is a pity that the public goes to the private sector as there are less in government hospitals
× RELATED அதிகரித்து வரும் வெயில்...