×

சென்னை நுங்கம்பாக்கத்தில் ரூ40 கோடி செலவில் 6 மாடியில் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடம்: முதல்வர் எடப்பாடி திறந்து வைத்தார்

சென்னை: நுங்கம்பாக்கம், பள்ளி கல்வி இயக்கக வளாகத்தில், 1,22,767 சதுர அடியில் தரை மற்றும் ஆறு தளங்களுடன் ரூ39 கோடியே 90 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார். புதிய கட்டிடத்தின் தரைதளத்தில் வாகனங்கள் நிறுத்துமிடம், முதல் தளத்தில் மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்கக அலுவலகம், இணை இயக்குநர் அறைகள், பொது கூட்டரங்கு, இரண்டாம் தளத்தில் பள்ளி கல்வி ஆணையர் அலுவலகம், இணை இயக்குநர்கள் மற்றும் துணை இயக்குநர்கள் அறைகள், மூன்றாம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் அறைகள்,

நான்காம் தளத்தில் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகம், இணை உறுப்பினர் அறைகள், துணை இயக்குநர் அறை, உறுப்பினர்கள் அறைகள், ஐந்தாம் தளத்தில் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அலுவலகங்கள், கூட்டரங்கு, ஆறாம் தளத்தில் கல்வி தொலைக்காட்சி அலுவலகம், கூட்டரங்கு மற்றும் அலுவலக அறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.மேலும், வரவேற்பு அறை உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.

Tags : Nungambakkam ,MGR Centenary Ceremony Building ,Chennai , 6-storey MGR Centenary Building at a cost of Rs 40 crore at Nungambakkam, Chennai: Chief Minister Edappadi inaugurated
× RELATED ஓடிடியில் வெளியாகிறது நுங்கம்பாக்கம்