×

சிக்கும் பெண்களை சீரழிக்கும் கும்பல்: வேலைவாய்ப்பு பெயரில் ‘பாலியல் வலைவிரிப்பு’

* ஏழை பெண்களுக்கு மட்டும் இன்டர்வியூ அழைப்பு
* ஆபாச வெப்சைட் சாட்டிங்கில் உருவாகும் திட்டம்?

சென்னை: கொரோனா பரவலை தடுக்க அரசுகள் கையாண்ட ஒரே வழி, ஊரடங்கு மட்டும்தான். இருப்பினும் பரவல் அதிகரித்ததே தவிர குறைந்தபாடில்லை. இந்த ஊரடங்கு கொரோனாவுக்கு உலை வைப்பதற்கு பதிலாக, ஏராளமானோரின் பிழைப்புக்குத்தான் உலை வைத்து விட்டது. வேலை இழந்தவர்கள் பற்றிய புள்ளி விவரங்கள் இதை வெட்டவெளிச்சமாக்கிவிட்டன. ஆனால், வேலை இழந்தவர்கள் பலர், வேலை வாய்ப்பு என்ற வெளிச்சத்தை நம்பிப்போய் விட்டில் பூச்சிகளாக விழுந்து கிடக்கின்றனர். நல்ல குடும்பம், நான்கு பேர் மதிக்கும் வாழ்க்கை. கஷ்டப்பட்டு கஞ்சி குடித்தாலும், கவுரவம் குலையவில்லை. இது, ஏழை நடுத்தர குடும்பங்களின் அடையாளம்.

இந்த அடையாளத்தை சிதைப்பதற்கென்றே உருவாகி விட்டது ஒரு நெட்வொர்க். வேலை இழந்தவர்களை போல இவர்கள் கவலைப்படும் கூட்டம் அல்ல. ஊரடங்கில் பொழுது போகாமல், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டரில் ஆபாச இணையதளங்களை பார்ப்பதும், அதில் சாட்டிங் செய்வதும்தான் பலரின் பொழுது போக்கு. மறைமுக பெயரில் செய்யப்படும் இந்த சாட்டிங்கில் சுவாரஸ்யம் மட்டும் கிடைப்பதில்லை. பல பலான தொடர்புகளுக்கு இது அச்சாரமாகி விடுகிறது. குரூப் செக்ஸ், கணவன் - மனைவியை மாற்றிக்கொள்வது என அத்தனை வக்கிரங்களும் இங்கே நிஜமாகி விடுவதாக கூறப்படுகிறது.

இப்படி பலான நெட்வொர்க்கில் கிடைத்த தொடர்பு, புதிது புதிதாக தேடுவதில் படு ஆர்வம் காட்டுகிறார்களாம். இணைய தொடர்பில் கிடைக்கும் வேறொருவர் மனைவியை மாற்றிக்கொள்ள  டூப்ளிகேட் மனைவியை தேடும் இந்த கும்பல், குரூப் செக்சுக்கும் அவர்களை பலிகடா ஆக்கி விடுகிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான களம், லோக்கல் வேலை வாய்ப்பு தளங்கள்தான் என்கின்றனர். ஊரடங்கில்  வேலை இழந்தவர்களும், புதிதாக வேலை தேடுபவர்களும் இணையதளங்களில் பதிவு செய்து அழைப்புக்காக காத்திருக்கின்றனர். அப்படி பதிவு செய்தவருக்கு ஒரு நாள் திடீரென போன் அழைப்பு வருகிறது.

‘‘மேடம். வேலைக்கு அப்ளை செஞ்சிருக்கீங்களா?’’. இந்த வார கடைசியில இன்டர்வியூ நடக்குது. வாங்க.’’ என்று போனில் அழைத்தவர் கூறியதும், அப்பாடா, நம் கஷ்டம் விடிந்து விட்டது எனக்கருதிய பெண், குறிப்பிட்ட நாளில் இன்டர்வியூவுக்கு புறப்பட்டுள்ளார். முகவரியில் ஒரு அலுவலக ‘செட்அப்’. படபடப்புடன் அமர்ந்தவரிடம் படிப்பு, அனுபவ விவரங்களோடு, வீட்டு பின்னணி, இதர வருமான விவரங்களையும் அக்கறையோடு விசாரித்துள்ளனர். வழக்கம்போல், சரி, போன்ல சொல்றோம். என்று அனுப்பிவிட்டனர். ஒரு வாரம் கழித்து மீண்டும் போன். போனில் பேசியவர் ஒரு கண்டிஷன் வைத்தார்.

‘ஒரு நாள் என் மனைவியாக இருந்தால்…’’ என்ற பீடிகையுடன் வேலை உத்தரவாதத்தை அள்ளி வீசினார்.  ஆனால், அப்படி வந்த ஒரு அழைப்பு, இப்படி மீள முடியாத வலையில் சிக்க வைக்கும் என ஒரு போதும் அந்த ஏழைப்பெண் நினைக்கவில்லை. ஊரடங்கால் வேலை பறிபோனது. சோற்றுக்கே வழியில்லை என நிலைமையை நொந்தபடி தலையாட்டிய இளம்பெண், மனதை கல்லாக்கியபடி சொன்ன இடத்துக்கு சென்றபோது, இன்டர்வியூ செய்தவர் ‘கணவராக’ நின்றிருந்தார். மற்றொரு ஜோடியும் தயாராக இருந்துள்ளது. அப்போதுதான், அது தம்பதிகளை மாற்றிக்கொள்ளும் ‘குரூப் செக்ஸ்’  கும்பல் என்பதே அந்த பெண்ணுக்கு உறைத்துள்ளது.

வேலை வாய்ப்பு தருவதாக கூறி பெண்களை மோசம் செய்யும் கொடூரம் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த வண்ணம்தான் உள்ளது. ஆனால், இந்த வேலைவாய்ப்பு வலை அதை விட கொடூரமானது. பெண்களின் படிப்பை ஆராய்கிறார்களோ இல்லையோ, குடும்ப பொருளாதார நிலை அக்குவேறு ஆணி வேறாக அவர்களுக்கு தெரிந்து விடுகிறது. அந்த அளவுக்கு, இன்டர்வியூ அழைப்புக்கு முன்பே ‘களஆய்வு’ கச்சிதமாக முடிந்து விடுகிறதாம். ஊரடங்கால்  பல குடும்பங்களில் ஒரு வேளை சோறுதான் சாத்தியமாகியுள்ளது. வாழ்வாதாரம் மொத்தமாக தொலைந்து விட்டது.  ஊரடங்கு முழுமையாக ஓய்ந்தபாடில்லை.

* இப்படி ஆபாச இணையதளம் பார்ப்பவர்கள் சாட்டிங் செய்யும்போது, எளிதாக பாலியல் வலை விரிக்க கற்றுக்கொள்வதோடு, அதற்கான குற்ற உணர்ச்சியும் அவர்களுக்கு காணாமல் போய்விடுகிறது என்கின்றனர் சில உளவியலாளர்கள்.

பாலியல் வலை விரிக்க கற்றுத்தரும் வெப்சைட்
*  தடை செய்த பிறகும் ஆபாச இணையதளங்களை பார்ப்பது அதிகரித்து வருகிறது.
*  ஊரடங்கில் ஆபாச இணையதளமே கதி என கிடப்பவர்கள் அதிகம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன.
* ஊரடங்கில் குழந்தைகள் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்பவர்கள், பதிவிறக்கம் செய்து பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

*  சில பிரபலமான ஆபாச இணையதளங்கள் ஒரே மாதத்தில் 100 கோடிக்கும் மேல் பார்க்கப்படுகின்றன.
* இதே பாதுகாப்பு உத்தியை பயன்படுத்தும் ஆபாச இணையதளங்களுக்கு, அரசின் தடையை மறந்து பிரவுசர்கள் அனுமதித்து விடுகின்றன.
* இந்தியா தடை செய்துள்ள இணையதளங்கள் 3,500
* வங்கிகளில் பாதுகாப்பான பரிவர்த்தனைகளை உறுதி செய்யும் வகையில், இணைய முகவரிக்கு முன்பு Https என சேர்க்கப்படுகிறது.

ஆபாச இணையதளம் அதிகம் பார்க்கப்படும் டாப் 3 நாடுகள்
1.அமெரிக்கா
2.இங்கிலாந்து
3.இந்தியா

Tags : Gang ,women , Gang that degrades trapped women: ‘sexual harassment’ in the name of employment
× RELATED இந்தியா கூட்டணி வென்றால் தான் நாட்டை...