×

முக்கிய நகரங்களை தகர்க்க சதி; 9 தீவிரவாதிகள் பிடிபட்டனர்: நள்ளிரவில் என்ஐஏ அதிரடி

திருவனந்தபுரம்: கேரளா, மேற்கு வங்கம் உட்பட 12 இடங்களில் என்ஐஏ நடத்திய சோதனையில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 9 ேபர் கைது ெசய்யப்பட்டுள்ளனர். இவர்கள்  கொச்சி உட்பட நாட்டின் முக்கிய பகுதிகளை தாக்க திட்டமிட்டிருந்த அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில் கேரளா உட்பட தென்மாநிலங்களில் ஐஎஸ் இயக்க ஆதரவாளர்கள் இருப்பதாகவும், இதுவரை 122 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. குறிப்பாக, கேரளாவில்தான் ஐஎஸ் இயக்க ெசயல்பாடுகள் அதிகம் இருப்பதாக ெதரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ேநற்று முன்தினம்  நள்ளிரவு முதல் நேற்று அதிகாலை வரை ேமற்கு வங்கம், ேகரளா உட்பட 12  இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் ஒரேநேரத்தில் அதிரடி ேசாதனை நடத்தினர். இதில் ேமற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தில் நடந்த ேசாதனையில் அல்கொய்தா தீவிரவாத இயக்கத்ைத சேர்ந்த 6 பேர் பிடிபட்டனர். இதுபோல், ேகரள மாநிலம் எர்ணாகுளம் ெபரும்பாவூரில் நடத்திய ேசாதனையில் 3 அல்ெகாய்தா தீவிரவாதிகள் சிக்கினர். இவர்கள் கட்டிட ெதாழிலாளர்கள் ேபார்வையில் கடந்த பல ஆண்டுகளாக ெபரும்பாவூரில் குடும்பத்துடன் தங்கி இருந்துள்ளனர். இவர்களிடம் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

இவர்கள்  தங்கியிருந்த வீடுகளை சுற்றிவளைத்து அதிகாரிகள் ைகது செய்துள்ளனர். பிடிபட்டவர்களில் ஒருவர் பெரும்பாவூரில் ஒரு துணிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவர்கள் டெல்லி உட்பட சில பகுதிகளில் தாக்குதல் நடத்த  திட்டமிட்டுள்ளனர். கேரளாவில் பிடிபட்டவர்கள் தீவிரவாத தாக்குதலுக்கு நிதி திரட்டும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். என்ஐஏ அதிகாரிகள் கொச்சி அலுவலகத்தில் வைத்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். ேகரளாவில் பிடிபட்ட  தீவிரவாதிகள் 3 ேபரும் யாக்கூப் பிஸ்வாஸ், முஷாரப் ஹுசைன், முர்ஷித் அசன் என தெரியவந்துள்ளது.

இவர்கள் பிடிபட்ட விபரம் குறித்து என்ஐஏ அதிகாரிகள் ேகரள  டிஜிபி லோக்நாத் பெக்ராவுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவரும் இதை உறுதி  செய்துள்ளார். அதுபோல் ேநஜ்மஸ் சாகிப், அபு சுபியன், மைனுல் மொண்டல்,  லியு யீன் அகமது, அல் மாமுன் கமல் மற்றும் அதிதுர் ரஹ்மான் ஆகியோர் மேற்கு  வங்க மாநிலத்தில் கைது செய்யப்பட்டவர்கள். அவர்களிடம் இருந்து  நாட்டுத் துப்பாக்கிகள், கூர்மையான ஆயுதங்கள், புல்லட் புரூப், மொபைல்  போன்கள், லேப்-டாப்கள் உள்ளிட்ட பொருட்கள் கைப்பற்றப்பட்டன. கைது  செய்யப்பட்டவர்கள் அனைவரும் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள்.

கைது  செய்யப்பட்டுள்ள 9 தீவிரவாதிகளும் டெல்லி, கொச்சி மற்றும் மும்பையில்  தாக்குதல்களை நடத்த, பாகிஸ்தானை தளமாக கொண்ட அல்கொய்தா அமைப்பில் பயிற்சி பெற்றவர்கள் என்ற அதிர்ச்சி செய்தி வெளியாகி உள்ளது. அவர்கள் கொச்சி  கடற்படை மற்றும் கப்பல் தளம் உட்பட முக்கிய இடங்கள் மீது தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்தனர். ேமலும்,  இந்தியாவின் முக்கிய பகுதிகளை தாக்கி பொதுமக்களை கொல்லவும் இந்த  தீவிரவாதிகள் திட்டமிட்டிருந்ததாகவும், சோதனைகள் தொடர்ந்து நடந்து  வருவதாகவும், மேலும் பலர் கைது செய்யப்படலாம் எனவும் என்ஐஏ  தெரிவித்துள்ளது.

* பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்படும் அல்கொய்தா தீவிரவாதிகளிடம் இருந்து, இந்த 9 தீவிரவாதிகளுக்கும் உத்தரவுகள் வந்துள்ளன.
* பாகிஸ்தானில் இருந்து இவர்களை தொடர்பு கொள்ள, சமூக ஊடகங்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
* டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள இடங்களில் தாக்குதல் நடத்தும்படி, பாகிஸ்தானில் இருந்து இவர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது..
* மேலும், ஜம்மு காஷ்மீர் உள்பட நாட்டின் பல்வேறு இடங்களில் அல்கொய்தா அமைப்பை நிறுவும் பணியும் அளிக்கப்பட்டு இருக்கிறது.

வேலைக்கு செல்வதில்லை
கேரளாவில் சிக்கிய 3 தீவிரவாதிகளில் ஒருவரான முர்ஷித் அசன் வேலைக்கு அதிகமாக செல்வதில்லை. பெரும்பாலும் கட்டிட வேலைக்கும் டீ கடை வேலைக்கும் தான் சென்று வந்துள்ளார். அறையில் இருக்கும்போது லேப்டாப் பயன்படுத்தி வந்தார். எதற்காக லேப்டாப் பயன்படுத்தினார் என்று தெரியாது என்று அவருடன் தங்கியிருந்தவர்கள் தெரிவித்தனர்.

வெடிகுண்டு மாநிலம்
மேற்கு வங்கத்தில் தீவிரவாதிகள் சிக்கியது பற்றி இம்மாநில ஆளுநர் ஜகதீப் தன்கார் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘சட்ட விரோதமாக வெடிகுண்டுகள் தயாரிப்பதற்கான மாநிலமாக, மேற்கு வங்கம் மாறி விட்டது. முதல்வர் அலுவலகத்தில் உள்ள காவல் துறையினர், எதிர்கட்சிகளின் அரசியல் தவறுகளில் மட்டுமே கவனம் செலுத்துகின்றனர். அவர்கள் சட்டம் ஒழுங்கு சீர்குலைவுக்கான பொறுப்பில் இருந்து தப்ப முடியாது,’ என கூறியுள்ளார்.

Tags : militants ,cities , Conspiracy to destroy major cities; 9 militants captured: NIA operation at midnight
× RELATED மணிப்பூரில் கூடுதல் எஸ்.பி....