×

புலம்பெயர் தொழிலாளர்களுக்கான சிறப்பு ரயிலில் இதுவரை 97 பேர் உயிரிழப்பு: மக்களவையில் மத்திய அரசு தகவல்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை அவரவர் சொந்த மாநிலங்களுக்கு அனுப்புவதற்காக இயக்கப்பட்ட ஷ்ராமிக் ரயில்களில் 97 பயணிகள் உயிரிழந்ததாக மத்திய அரசு ராஜ்யசபாவில் தெரிவித்தது. கொரோனாவை கட்டுப்படுத்த மார்ச் 25 முதல் 68 நாட்கள் ஊரடங்கு போடப்பட்டிருந்தது. அந்த காலத்தில் எத்தனை புலம்பெயர் தொழிலாளர்கள் இறந்தனர் என சில நாட்களுக்கு முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அந்த தகவல்கள் தங்களிடம் இல்லை என தொழிலாளர் அமைச்சகம் பதிலளித்தது.

இது பெரும் சர்ச்சையானது. இந்நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஒபிரைன் ஷ்ராமிக் ரயில்களில் பயணித்தவர்களில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என கேள்வியை எழுப்பியிருந்தார். இதற்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் அளித்த பதிலில் தெரிவித்திருப்பதாவது: ஊரடங்கு காலத்தில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை தங்கள் சொந்த மாநிலங்களுக்கு அழைத்துச் செல்ல மே 1 முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன.

ஆகஸ்ட் 31 வரை 4,621 ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் ஓடின. இதில் 63 லட்சத்து 19 ஆயிரம் பேர் பயணிகள் பயணம் செய்துள்ளனர். செப்டம்பர் 9 வரை, பயணிகளில் 97 பேர் உயிரிழந்துள்ளனர். 51 பேரின் பிரதே பரிசோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளன. அதில் பலரும் இதய முடக்கம், இதய நோய், மூளையில் ரத்த கசிவு, முன்பே இருக்கும் நாள்பட்ட நோய்களினால் இறந்துள்ளனர். ஷ்ராமிக் ரயில்களை இயக்க மாநில அரசுகளிடமிருந்து ஆக., 31 வரை ரூ.433 கோடி வசூலிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.

Tags : migrant workers ,Lok Sabha , 97 killed in special train for migrant workers: Lok Sabha
× RELATED கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் 3 லட்சம் வெளியூர் வாக்காளர்கள்