×

தாம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு நினைவுக் கூர தனக்கு தானே சிலை வைத்தக் கொண்ட தொழிலாளி : வாழப்பாடியில் வினோதம்

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே குப்பைகளை சேகரித்து விற்பனை செய்து வரும் தொழிலாளி ஒருவர் தனக்கு தானே சிலை வைத்து கொண்ட வினோதம் மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. தூக்கியம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 60 வயதான நல்ல தம்பி தனக்கு தானே சிலை வைத்து கொண்டவர் ஆவார். 20 ஆண்டுகளுக்கு முன்னாள் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள பூர்வீக சொத்துக்களை கவலைப்படாமல் வீட்டை விட்டு வெளியேறிய அவர், கிடைத்த வேலைகள் அனைத்தையும் செய்துள்ளார்.

இப்போது, பழைய பாட்டில், அட்டை குப்பைகளை சேகரித்து வாழ்க்கை நடத்துபவர், இப்படி சிறுக சிறுக சேர்த்த பணத்தில் இரு வீட்டு மனைகளை வாங்கி அதில் தனது முழு உருவச் சிலையை வைத்துள்ளார். தாம் வாழ்ந்ததற்கான அடையாளத்தை அடுத்த தலைமுறையினர் அறிந்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக தான் தனக்கு தானே சிலை வைத்துக் கொண்டதாக நல்ல தம்பி தெரிவித்துள்ளார். இரு கரம் கூப்பியபடி இவரது முழு உருவச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இது கிராமப்புற குலதெய்வ கோயில்களில் காணப்படும் முன்னோர்களின் சிலைகளை போன்று உள்ளது.


Tags : Identity, idol, worker, vassal, strangeness
× RELATED செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் ஏப்.4-ம் தேதி வரை நீடிப்பு!