மணமேல்குடியில் ரூ16.50 லட்சத்தில் ஆழ்துளை கிணறு அமைத்தும் பயன்பாட்டிற்கு வராத அவலம்; வீணாகும் மக்களின் வரிப்பணம்

அறந்தாங்கி: மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம் மணமேல்குடியில் குடிநீர்பிரச்சினையை தீரப்பதற்காக, மணமேல்குடி கிராம ஊராட்சி சார்பில் கிராம ஊராட்சி பொதுநிதியில் இருந்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.16 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பீட்டில் 1040 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணறு, ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில், பம்ப்ரூம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, டெண்டர்விடப்பட்டது. இதைத் தொடர்ந்து இப்பணியை ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்தக்காரர், 1040 அடி ஆழத்திற்கு ஆழ்துளை கிணற்றை அமைத்து, குழாய் பதித்தார். பின்னர்அவர்ஆழ்துளை கிணறு அமைத்ததற்கான பட்டியலை கிராம ஊராட்சி நிர்வாகத்திடம் வழங்கினார். அவரது பட்டியலை பெற்ற கிராம ஊராட்சி நிர்வாகம் இதுவரை ஆழ்துளை கிணறு அமைத்த ஒப்பந்தக்காரருக்கு பணி செய்ததற்கான பணத்தை கொடுக்கவில்லை. ஆழ்துளை கிணறு அமைத்ததற்கு பணம் வழங்கப்படாததால், அந்த ஒப்பந்தக்காரர் பம்ப் ரூம் கட்டி, மின்இணைப்பு பெறவில்லை.

இதனால் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு, சுமார்6 மாதங்களாகியும், இன்னும் அதை பயண்பாட்டிற்கு கொண்டு வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் கூறியது: மணமேல்குடியில் கிராம ஊராட்சி சார்பில் மக்களின் அடிப்படை தேவைக்காக ரூ.16லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறு மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால், மக்களின் வரிப்பணம் வீணாகிறது. மேலும் ஆழ்துளை கிணறு அமைக்காததால், மணமேல்குடியில் பல்வேறு பகுதிகளில் குடிநீர்தட்டுப்பாடு நிலவுகிறது. எனவே கலெக்டர் உடனடியாக தலையிட்டு, மணமேல்குடியில் போடப்பட்டுள்ள ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டு வந்து, மக்களுக்கு குடிநீர்வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்றார். ஆழ்துளை கிணறை பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>