×

இன்று புரட்டாசி முதல் சனிக்கிழமை தாந்தோணிமலை கோயிலில் தடுப்பு கட்டைகள் அமைப்பு; தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப பக்தர்கள் எதிர்பார்ப்பு

கரூர்: தாந்தோணிமலை வெங்கட்ரமண சுவாமி கோயிலில் புரட்டாசி சனிக்கிழமையை முன்னிட்டு பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்ய வசதியாக தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்றது. கரூர் தாந்தோணிமலையில் தென் திருப்பதி என அழைக்கப்படும் கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆண்டு தோறும் புரட்டாசி மாதம் முழுதும் திருத்தேரோட்ட நிகழ்வும், இந்த மாதத்தில் வரும் அனைத்து சனிக்கிழமை நாட்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் நடைபெறும். இந்தாண்டு கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வழிபாட்டு நெறிமுறைகளுடன் பக்தர்கள் கோயிலுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதன்படி கோயில் நுழைவு வாயில் பகுதியில் பக்தர்கள் வரிசையாக வந்து சாமி தரிசனம் செய்யும் வகையில் தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.

அதே நேரத்தில் புரட்டாசி விழா துவங்கும் பட்சத்தில், அதிகளவு பக்தர்கள் வருவார்கள். ஆனால் கோயில் எதிரே உள்ள தெப்பக்குளம் தண்ணீரின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே கோயில் நிர்வாகிகள் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்ப தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையே கோயிலுக்கு வரும் பக்தர்கள், அர்ச்சனை செய்ய தேவையான எந்த பொருட்களும் வாங்கி வரக்கூடாது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனாலும், பக்தர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் கோயில் நுழைவு வாயில் பகுதியை சுற்றிலும் அபிஷேக விற்பனை கடைகள் உள்ளது எனவும் கூறப்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Tags : Devotees , Today is the first Saturday of Purattasi. Devotees expect to fill the pool with water
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...