×

தெப்பக்காடு வனப்பகுதியில் பெண் யானை மர்மச்சாவு

கூடலூர்: தெப்பக்காடு வனப்பகுதியில் பெண் யானை ஒன்று மர்ம மான முறையில் உயிரிழந்தது. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு வனப்பகுதிக்குட்பட்ட இம்ரல்லா வனப்பகுதியில் நேற்று முன்தினம் மாலை பெண் யானை ஒன்று இறந்து கிடப்பதை வனத்துறையினர் பார்த்தனர். இறந்த யானையின் உடலை உதவி வன பாதுகாவலர்கள் (பயிற்சி) கார்விட் கன்வார், ஸ்ரீனிவாசன், வனச்சரகர் ராஜேந்திரன், தொண்டு அமைப்பு பிரதிநிதிகள் ஆபித், டேனியல், தெப்பக்காடு இடிசி தலைவர் சிக் பொம்மன் ஆகியோர் முன்னிலையில் கால்நடை மருத்துவர்கள்  ராஜமுரளி, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று உடற்கூராய்வு செய்தனர்.

இறந்த பெண் யானைக்கு சுமார் 15 முதல் 20 வயது இருக்கும். யானை நீரோடையில் தண்ணீர் குடிக்க வந்த இடத்தில் தவறி விழுந்து உயிரிழந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது. எனினும் மர்மமான முறையில் இறந்துள்ள யானையின் உடற் பாகங்கள் ஆய்விற்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதன் முடிவுகள் வந்த பின்னரே இறப்பிற்கான காரணம் தெரியவரும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.


Tags : forest , Female elephant mysterious in the Theppakadu forest
× RELATED காட்டு தீ அணைக்கும் பணியில் ஈடுபட்ட...