டெல்லி: கொரோனாவை எதிர்க்கும் ஆற்றல் கபசுரக்குடிநீருக்கு இருப்பதை ஆயுஷ்துறை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் ஆற்றலும் சித்தமருந்தான கபசுரக்குடிநீருக்கு உள்ளது என மத்திய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார். மதுரை எம்.பி. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் பதிலளித்தார்.