×

ஆசனூர் மலைப்பகுதியில் கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது

*3.5 கிலோ பறிமுதல்

சத்தியமங்கலம் : ஆசனூர் மலைப்பகுதியில் மக்காச்சோளத்தில் ஊடுபயிராக கஞ்சா செடி பயிரிட்ட விவசாயி கைது செய்யப்பட்டார். சத்தியமங்கலத்தை அடுத்துள்ள ஆசனூர் மலைப்பகுதியில் கேர்மாளம் அருகே மக்காச்சோளம் பயிரிட்டுள்ள விளைநிலத்தில் ஊடுபயிராக கஞ்சா செடிகள் பயிரிட்டிருப்பதாக ஆசனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆசனூர் போலீசார் கேர்மாளம் அடுத்துள்ள ஒரத்தி மலைக்கிராமத்தில் ரோந்து பணி மேற்கொண்டு போது அப்பகுதியில் உள்ள விவசாய குருசாமி (40) என்பவரது விவசாய நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள மக்காச்சோள பயிருக்கு இடையே ஊடுபயிராக கஞ்சா செடிகள் வளர்ந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

குருசாமியை பிடித்து விசாரித்தபோது மக்காச்சோளம் பயிரில் ஊடுபயிராக கஞ்சா சாகுபடி செய்ததாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவரிடமிருந்து 3.5 கிலோ கஞ்சா செடிகள் பறிமுதல் செய்யப்பட்டன. குருசாமி மீது ஆசனூர் போலீசார் வழக்குப்பதிந்து கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மலை கிராமத்தில் விவசாயி மக்காச்சோளம் பயிரில் ஊடுபயிராக கஞ்சா பயிரிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : hills , Cannabis, Satyamangalam, Aasanur,3.5Kg, Farmer Arrested
× RELATED பெரும்பாறை மலைப்பகுதியில்...