×

தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உயிரிழந்த செல்வன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் தட்டார்மடம் அருகே உயிரிழந்த செல்வன் உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர். செல்வன் மரணத்திற்கு காரணமான காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணனை கைது செய்ய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சாத்தான்குளம் டி.எஸ்.பி. காட்வின் ஜெகதீஸ், செல்வன் வீட்டில் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏதும் ஏற்படாததால் தொடர்ந்து உடலை வாங்க உறவினர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.

Tags : Relatives ,Selvan ,Thoothukudi district ,Thattaramadam , Thoothukudi, Thattarmadam, Selvan, Uda, relatives denied
× RELATED பீகாரில் புதைத்த சடலத்தில் தலை...