×

யாதகிரியில் கனமழையால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு தண்ணீரில் மூழ்கியது கோயில்கள்

யாதகிரி : மாநிலத்தில் பெய்துவரும் கனமழையால் கிருஷ்ணா மற்றும் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் கரையோரத்தில் இருந்த கோயில்கள் வெள்ளத்தில் மூழ்கியது. மாநிலத்தில் பருவமழை பெய்து வருகிறது. தொடர்ந்து இடைவிடாது பெய்துவரும் கனமழையால் விஜயபுரா, தென்கனரா, குடகு உள்பட மலைநாடு மற்றும் கடலோர மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. விளைபயிர்கள் நீரில் மூழ்கி வீணாகியுள்ளது. சில பகுதிகளில் ஈரப்பதம் அதிகரித்ததால் பயிர்கள் அழுகி வருகிறது.

இந்நிலையில் யாதகிரி மாவட்டம் மற்றும் மகாராஷ்டிராவில் பெய்து வரும் மழையாலும் மாவட்டத்தில் பாயும் கிருஷ்ணா மற்றும் பீமா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பீமா நதியில் 50 ஆயிரம் கன அடி நீர் பாய்கிறது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றின் கரையோரத்தில் உள்ள வீரஆஞ்சநேய மற்றும் காங்கேலேஸ்வரர் கோயில்கள் நீரில் மூழ்கியது. இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரிகள் கூறுகையில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்துள்ளதால் அருகில் உள்ள கிராம மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பீமனடி பாலத்தில் இருந்து  பொதுமக்கள் செல்பி எடுக்கின்றனர். இது ஆபத்தானது. எனவே பொதுமக்கள், நீர் நிலைகளுக்கு அருகில் செல்லவும், புகைப்படம் எடுக்கவும் கூடாது என எச்சரித்தனர்.

Tags : Temples ,Yadgir , Yathagiri, Flood, heavy rains, Karnataka , krishna, beema
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...