×

ரயிலில் முக கவசம் அணியாவிட்டால் பயணிகளுக்கு 200 அபராதம்

சென்னை: கொரோனா நோய் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் அவசர சட்டத்திற்கு கடந்த வாரம் தமிழக ஆளுநர் அனுமதி அளித்தார். இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம், கட்டுப்படுத்தப்பட்ட பகுதி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். அதேபோன்று ரயிலில் பயணம் செய்யும் போதும் முகக்கவசம் அணிந்துதான் பயணம் மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு முகக்கவசம் அணியாமல் பயணம் செய்யும் பயணிகளிடம் இருந்து ரூ.200 அபராதம் வசூலிக்கப்படும். அந்த தொகையை டிக்ெகட் பரிசோதகர் வசூலிப்பார் என்று ரயில்வே நிர்வாகம் சார்பில் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags : passengers , 200 fine for passengers not wearing face shield on train
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...