×

கோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15 நாளுக்கு ஒருமுறை கொரோனா ஆய்வு: ராமதாஸ் டிவிட்

சென்னை: கோயம்பேடு சந்தை பணியாளர்களுக்கு 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா ஆய்வு செய்யப்பட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், ‘கோயம்பேடு உணவு தானிய சந்தை திறக்கப்பட்டுள்ளது; காய்கறி சந்தை 28ம் தேதி திறக்கப்படுகிறது. கோயம்பேடு சந்தையிலிருந்து தான் சென்னையில் அதிக அளவில் கொரோனா பரவியது என்பதை கருத்தில் கொண்டு போதிய முன்னெச்சரிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோயம்பேடு சந்தை கடை உரிமையாளர்கள், பணியாளர்கள், சரக்குந்து ஓட்டுனர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் 15 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா ஆய்வு செய்யப்பட வேண்டும்.

அதுகுறித்த விவரங்களை பதிவு செய்ய அனைவருக்கும் ஸ்மார்ட் அட்டை வழங்கப்பட வேண்டும். சந்தை பணியாளர்களுக்கு கொரோனா ஆய்வு செய்வதற்காக கோயம்பேடு சந்தை வளாகத்தில் தற்காலிக கொரோனா ஆய்வு மையம் அமைக்கப்பட வேண்டும். சந்தைக்கு வரும் அனைவருக்கும் உடல்வெப்பநிலை சோதனை செய்யப்பட வேண்டும்’ எனக்கூறியுள்ளார்.

Tags : inspection ,Corona ,market employees ,Coimbatore ,Ramadas , Corona inspection for Coimbatore market employees once in 15 days: Ramadas tweet
× RELATED இந்த நாள் சார் ஆட்சியர் திடீர் ஆய்வு