×

ஆன்லைன் வகுப்புகளில் ஏழை மாணவர்கள் பங்கேற்க வசதி : உபகரணங்களை வழங்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

டெல்லி:  ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்க ஏதுவாக டெல்லி தனியார் பள்ளிகளில் ஏழை குழந்தைகளுக்கு உரிய உபகரணங்களை வழங்கவும், இணைய வசதியை ஏற்படுத்தி கொடுக்கவும் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் குழந்தைகளுக்கு ஆன்லைன் வழி கல்வியை கற்க ஏற்பாடு செய்யப்பட்டன. இருப்பினும் அவை ஏழை குழந்தைகள் கல்வி கற்கும் வகையில் ஏதுவாக அமையவில்லை. இதனால் பல குழந்தைகளின் கல்வி கேள்விக்குறியானது. இதனையடுத்து, ஏழை குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்ள முடியாத நிலையில் இருப்பதால், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் அவைகளுக்கு உரிய உபகரணங்களை வழங்க உத்தரவிடக்கோரி, பொதுநல வழக்கு ஒன்று தொடரப்பட்டது.

இந்த வழக்கில் ஏற்கனவே பிராமண பாத்திரம் தாக்கல் செய்திருந்த டெல்லியை சேர்ந்த 4 தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தேவையான வசதிகளை ஏற்படுத்தி தர சம்மதம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், இந்த வழக்கானது டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மன்மோகன் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதிகள் டெல்லியில் உள்ள 10 அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளியில் பயிலும் ஏழை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு தேவையான உபகரணங்கள் மற்றும் இணைய சேவையை ஏற்படுத்தி தர வேண்டுமென்று உத்தரவித்துள்ளனர்.

Tags : Facility ,Delhi High Court , Online, poor students, equipment, Delhi High Court, order
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலின் ஜாமின் மனு மீது...