×

கொரோனா பரிசோதனை தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையிரலில் பாதிப்பு தென்படுகிறது : அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

சென்னை : தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10 சதவிகித்திற்கும் குறைவாக உள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்..சென்னை ராஜூவ் காந்தி அரசு மருத்துவமனையில் 120 படுக்கைகள் கொண்ட கொரோனா சந்தேக வார்ட்டை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆய்வு செய்தார்..பின்னர் பேட்டியளித்த அவர், தமிழகத்தில் கொரோனா சிகிச்சைக்காக 1.42 லட்சம் படுக்கை வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டிருப்பதாகவும், கொரோனாக்கு பின் ஏற்படும் உடல்நலக்குறைவு சோதனை மையத்தில் 3000பேர் பரிசோதனை செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்தார்..

கொரோனா பரிசோதனை தொற்று இல்லை என்று உறுதியானலும், சிலருக்கு நுரையிரலில் பாதிப்பு தென்படுவதாகவும் அதற்காக தான் கொரோனா சந்தேக மையம் அமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்..
தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுக்கான தாக்கம் 3 வாரங்களுக்கு பின் தான் தெரியவரும் என்றும் தற்போது அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு 10% குறைவாக தான் இருப்பதாக தெரிவித்தார்..தமிழகம் நல்ல நிலையை நோக்கி சென்று கொண்டிருப்பதாகவும், மற்ற மாநிலங்களில் தொற்று அதிகரிப்பதால் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்..

அபராதம் விதிப்பது அரசின் நோக்கம் இல்லை என்றும் வழிகாட்டு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்..தொடர்ந்து பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,  மத்திய மற்றும் மாநில அரசு சார்பில் வெளியிடப்பட்ட பரிசோதனை முடிவில் நாட்டிலேயே தமிழகத்தில் தான் பரிசோதனை எண்ணிக்கை  வேறுபாடு விகிதம் குறைவாக உள்ளதாகவும் பொது சுகாதாரத்துறையின் சார்பில் எடுக்கப்படும் பரிசோதனை குறித்த விவரங்கள் ஐ சி எம் ஆர் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் தாமதத்தால் எண்ணிக்கை மாறுபட்டுள்ளதாக தெரிவித்தார்..

Tags : corona testing ,some ,Minister Vijayabaskar , Corona, Testing, Infections, Lungs, Minister Vijayabaskar
× RELATED ‘ஹோலி’ கொண்டாட்டம் என்ற பெயரில்...