×

பாலியல் தொல்லை செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப் நாக்கை கடித்து காயப்படுத்தினேன்: முன்னாள் மாடல் அழகியின் பகீர் குற்றச்சாட்டால் பரபரப்பு

வாஷிங்டன்: அமெரிக்க தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அதிபர் டிரம்பின் பாலியல் சீண்டலால் அவரது நாக்கை காயப்படுத்தினேன் என்று முன்னாள் மாடல் அழகியின் பகீர் குற்றச்சாட்டால் தேர்தல் களத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் வரும் நவ. 3ம் தேதியன்று அதிபர் தேர்தல் நடைபெற உள்ளதால், தேர்தல் பிரசார களம் சூடுபிடித்துள்ளது. குடியரசு கட்சி சார்பில் தற்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி வேட்பாளராக ஜோ பைடன் போட்டியிடுகிறார். இந்நிலையில், முன்னாள் மாடல் அழகியான எமி டோரிஸ் என்பவர், ‘தி கார்டியன்’ என்ற பத்திரிக்கைக்கு அதிபர் டிரம்ப் மீது பாலியல் புகார் தெரிவித்து பேட்டியளித்துள்ளார்.

அதில், ‘1997ம் ஆண்டில் அமெரிக்க ஓபன் ஸ்டாண்டில் ரியல் எஸ்டேட் அதிபராக இருந்த டொனால்ட் டிரம்ப், என்னை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தினார். அவர் தனது நாக்கை என் தொண்டைக்குக் கீழே வைத்து முத்தமிட்டார். நான் அவரைத் தள்ளிவிட்டேன். பின்னர் அவர் என்னை இறுக்கமாக கட்டிப்பிடித்தார். அவரது கைகள் மிகவும் மோசமான அனுபவங்களை கொடுத்தது. எனது உடலின் பிற பாகங்களையும் இறுக பிடித்தார். நான் அவரது பிடியில் இருந்து தப்ப முடியவில்லை.

ஒருகட்டத்தில் நான் அவரை என் பற்களால் அவரது நாக்கை கடித்து தள்ளிவிட்ேடன். அப்போது அவரது நாக்கில் காயம் ஏற்பட்டிருக்கும். அதற்கான அடையாளம் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது டிரம்ப்புக்கு 51 வயது இருக்கும். என்னுடைய வயது அப்போது 24’ என்றார். ஆனால், இந்த சம்பவத்தை அதிபர் டிரம்ப்பின் வழக்கறிஞர்கள் மறுத்து, பல கேள்விகளை எழுப்பியுள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்க ஓபன் ஸ்டாண்ட் போன்ற ஒரு பொது இடத்தில், டிரம்ப் அவ்வாறு நடந்து கொண்டிருந்தால், சாட்சிகள் இருந்திருப்பார்கள். செப். 5, 1997 அன்று நடந்த இந்த சம்பவத்தை, போலீசாரிடம் எமி டோரிஸ் ஏன் தெரிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

ஆனால் எமி டோரிஸ், நடந்த சம்பவத்தை பற்றி நண்பர் ஒருவரிடமும், அவரது தாயிடமும் கூறியதாக பேட்டியில் தெரிவித்துள்ளார். முன்னாள் மாடல் அழகியான எமி டோரிஸ், தற்போது இரண்டு மகள்களுக்கு தாயாக உள்ளார். புளோரிடாவில் வசிக்கிறார். கடந்த 2016ல்  குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக டிரம்ப் போட்டியிட்ட போது, நடந்த சம்பவத்தை வெளியில் சொல்ல விரும்பியதாகவும், ஆனால் தனது குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால், தகவலை வெளியிடவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
அதிபர் டிரம்ப் மீது பல ெபண்கள் பாலியல் குற்றச்சாட்டுகளை கூறிய நிலையில், அந்த பட்டியலில் எமி டோரிசும் இணைகிறார்.

ஆனால், அதிபர் டிரம்பும் அவரது வழக்கறிஞர்களும் அந்தக் குற்றச்சாட்டுகளை கடுமையாக நிராகரித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்னர் மன்ஹாட்டன் டிபார்ட்மென்ட் கடையில், டிரம்ப் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக கட்டுரையாளர் ஈ ஜீன் கரோல் என்பவர் குற்றம்சாட்டினார். மேலும், 2019ல் டிரம்புக்கு எதிராக அவதூறு வழக்குத் தாக்கல் செய்தார். இவ்வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும்நிலையில், மற்றொரு மாடல் அழகியின் புதிய குற்றச்சாட்டு அமெரிக்க ேதர்தல் களத்தில் சூட்டை கிளப்பி உள்ளது.

Tags : Trump ,US , Sex, harassment, US President, Trump, tongue, model beauty, Pakir
× RELATED அமெரிக்க தேர்தலில் தோற்றால் நாட்டை...