×

வடகிழக்கு மாநிலங்களை பீகார் மாநிலத்துடன் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில்வே பாலத்தை நாட்டுக்கு அர்ப்பணித்தார் பிரதமர் மோடி!!

பாட்னா : பீகாரில் 12 புதிய ரயில் திட்டங்களை காணொலி மூலம் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் வடகிழக்கு பகுதிகளை பீகார் மாநிலத்துடன் இணைக்கும் வரலாற்று சிறப்புமிக்க கோசி ரயில்வே பாலத்தையும் நாட்டுக்கு அர்ப்பபணித்தார் பிரதமர் மோடி. பீகாரில் கோசி ஆற்றுக்கு குறுக்கே பிரமாண்ட ரயில் பாலம் கட்டும் திட்டத்திற்கு 2003 - 2004 ஆண்டில் மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. 516 கோடி ரூபாய் மதிப்பில் 1.9 கி.மீ. நீளத்திற்கு திட்டமிடப்பட்டிருந்த இந்த பாலத்தின் கட்டுமான பணிகள் கொரோனா நெருக்கடிக்கு மத்தியில் முடிவடைந்துள்ளன. இந்நிலையில் இந்த கோசி ரயில் பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கப்பட்டது.

வடகிழக்கு மாநிலங்களை இணைக்கும் இந்த பாலம் திறக்கப்படுவது பீகார் வரலாற்றில் சிறப்புமிக்க தருணமாகும். இதன்மூலம் 86 ஆண்டு கனவு நிறைவேறி உள்ளது. பிராந்திய மக்களின் காத்திருப்புக்கு பலன் கிடைக்க உள்ளது. இந்த திட்டத்துடன் பயணிகள் வசதிக்கான மேலும் 12 ரயில் திட்டங்களையும் பிரதமர் அறிமுகம் செய்து வைத்தார். பீகாரின் குயுல் ஆற்றில் ஒரு புதிய ரயில்வே பாலம், 2 புதிய ரயில் தடங்கல், 5 மணிமயமாக்கல் திட்டங்கள், ஒரு மின்சார எஞ்சின் பணிமனை மற்றும் பற்பக்தியார்பூர் இடையே 3வது தடம் ஆகியவை இதில் அடங்கும்.


Tags : Modi ,state ,Kochi Railway Bridge ,states ,Bihar , Northeast, Bihar State, Historic, Special, Kochi Railway, Bridge, Prime Minister Modi
× RELATED பிரதமர் மோடியின் பேச்சுக்காக...