×

எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை எதிர்த்து திமுக உறுப்பினர் பி.வில்சன் பேச்சு

சென்னை: எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதை எதிர்த்து திமுக உறுப்பினர் பி.வில்சன் பேசியுள்ளார். தமிழகத்தில் இருந்து 57 பேர் நாடாளுமன்ற உறுப்பினர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 57 எம்.பி.க்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்வதால் தமிழகத்துக்கு ரூ.770 கோடி இழப்பு ஏற்படும் என்று வில்சன் கூறியுள்ளார்.

முன்னதாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படுவது மக்களுக்கு இழைக்கப்படும் துரோகம் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார். பொருளாதாரத்தைச் சீர் செய்யவோ, நிவாரணம் வழங்கவோ தயாராக இல்லாத மத்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் உரிமைகளையும் பறிப்பது வேதனையானது. மக்கள் பிரதிநிதிகளை அவமதிக்கும் செயல்.

எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தம் தொகுதி மக்களுக்கு எந்த ஒரு பணியையும் செய்துவிடக் கூடாது என்ற உள்நோக்கத்துடன் மத்திய அரசு நடந்துகொள்வது மக்களாட்சித் தத்துவத்திற்கும், நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கும் மாறானது. நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதி ரத்து செய்யப்படும் உத்தரவை திரும்ப பெற வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

Tags : P. Wilson ,DMK ,cancellation , MP, constituency development funds, DMK
× RELATED தமிழகம், புதுச்சேரி 40 தொகுதிகளிலும்...