×

பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டம்

டெல்லி: பயணிகள் மற்றும் சரக்கு ரயில் கட்டணங்களை அதிகரிக்க மத்திய ரயில்வே வாரியம் திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக ரயில்வே வாரிய தலைமை நிர்வாகி வி.கே.யாதவ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறும்போது, சில ரயில் நிலையங்கள் மேம்படுத்த வேண்டியுள்ளதால் பயணிகள் ரயில் கட்டணத்தையும் சரக்கு ரயில் கட்டணத்தையும் குறைந்த அளவில் உயர்த்தலாம் என்று முடிவெடுத்திருப்பதாக தெரிவித்தார். ரயில்வே அமைச்சகம் இது தொடர்பாக விரைவில் அறிவிக்கை வெளியிடும் என்றார்.

பயணிகள் மற்றும் சரக்கு கட்டணங்களை உயர்த்துவதற்கான வழிமுறைகள் ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மெதுவே இதை நோக்கி முன்னேறி கொஞ்சம் கொஞ்சமாக கட்டணங்கள் உயர்த்தப்படலாம் என்றார். நிதி ஆயோக் தலைமை அதிகாரி அமிதாப் காந்த், இந்தியாவில் பயணிகள் ரயில் கட்டண மானியம் மிக அதிகம். எனவே சரக்கு கட்டணம், பயணிகள் கட்டணம் உயர்த்தப்பட வேண்டியுள்ளது. இந்தியாவில் 70% சரக்குகள் சாலை வழியாகவே செல்கின்றன. எனவே இதில் சமநிலை தேவை. சரியான ஒரு சமநிலையை இதில் ஏற்படுத்துவது அவசியம் என்றார்.

தலைமை அதிகாரி யாதவ் மேலும் கூறுகையில், ஏப்ரல் 2023-ல் தனியார் ரயில் சேவை தொடங்கும். அவர்கள் கட்டணங்களை சுதந்திரமாக நிர்ணயம் செய்து கொள்ளலாம். ஏனெனில் அவர்கள் ரயில்வேயுடனும் போட்டியிட வேண்டும், சாலைப்போக்குவரத்துடனும் போட்டியிட வேண்டும். அதனால் அதிகக் கட்டணம் இருக்காது என்றார். பயணிகள் ரயில் கட்டணத்தை ஜனவரி 2020-ல் கிமீ-க்கு 4 காசுகள் அதிகரித்தது.

Tags : passenger ,Central Railway Board , Rail, Central Railway Board, Plan, Ticket Price
× RELATED திருவொற்றியூரில் ரூ.60 லட்சம்...