×

தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் உள்ளிட்ட 4 பேர் மீது கொலை வழக்குப்பதிவு

நெல்லை: தூத்துக்குடி தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது நெல்லையில் கொலை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தட்டார்மடத்தில் செல்வன் என்பவர் கொல்லப்பட்ட விவகாரத்தில் இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகர் திருமணவேல் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி அருகேயுள்ள சொக்கன்குடியிருப்பை சார்ந்தவர் எலிசபெத். இவருக்கு சொந்தமான தோட்டம் அங்குள்ள படுக்கப்பத்து - காந்திநகர் சாலையில் உள்ளது. இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒசரத்து குடியிருப்பு என்ற திருமணவேல் என்பவருக்கும் இந்த நிலபிரச்சனை காரணமாக கடந்த ஒன்றரை வருடமாக பிரச்சனை இருந்து வந்தது. இது சம்மந்தமாக திருமணவேல் என்பவர் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் என்பவரது துணையோடு இவர் மீது பல்வேறு பல்வேறு வழக்குகளை பதிவு செய்தார்.

குறிப்பாக இந்த எலிசபெத்தின் மகன்களான செல்வன், பங்காருராஜன், பீட்டர் ஆகிய 3 பேர் மீது கடந்த ஒன்றரை ஆண்டுகளில் 3 முறை பொய் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதுபற்றி இவர்கள் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் புகார் மனு அளித்துள்ளனர். இது சம்மந்தமாக கடந்த 4 தினங்களுக்கு முன்பு இவர்கள் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் மீது அஃவிடவிட் பதிவு செய்துள்ளனர். இந்த சூழ்நிலையில் நேற்று திருமணவேல் என்பவரின் உதவியோடு தட்டார்மடம் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன், செல்வன் என்பவரை தட்டார்மட பகுதியில் காரில் ஏற்றி கடத்தி கையாளும், கம்பாலும் அடித்து கொலை செய்து நெல்லை மாவட்டம் திசையன்விளை காவல் நிலையத்தின் சரகத்திற்குள் அவர்கள் போட்டுள்ளனர்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் செல்வனின் தாயார் எலிசபெத் நெல்லையிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் அடிப்படையில் தூத்துக்குடி தட்டார்மட காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்னன், அதிமுக பிரமுகரான திருமணவேல் உள்ளிட்ட 4 பேர் மீது நெல்லை மாவட்ட போலீசார் கொலை வழக்கு பதிவு செய்துள்ளனர். இறந்த செல்வனின் உடல் உடற்கூறு ஆய்வுக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. செல்வன், பங்காருராஜன், பீட்டர் இவர்கள் 3 பேரும் சகோதரர்கள் என்ற முறையில் கடந்த ஒன்றரை ஆண்டாக இவர்கள் மீது பல்வேறு பொய் வழக்குகள் போட்டு துன்புறுத்தியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags : Thoothukudi Thattaramadam ,Harikrishnan ,murder ,persons , Thoothukudi, Harikrishnan, murder case
× RELATED மாதனூரில் மனைவியை சரமாரியாக...