×

குன்னூர் அருகே கொரோனாவை கட்டுப்படுத்த சாலையில் தடுப்பு ஏற்படுத்தியதால் பொதுமக்கள் அதிருப்தி

குன்னூர் : கொரோனா பரவும் என கூறி குன்னூர் அருகேயுள்ள காட்டேரி டேம் பகுதியில் சாலை அடைத்து வைத்ததோடு, ஏழை எளிய மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்படுவதால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2600ஐ  கடந்துள்ளது. கடந்த ஜூன் மாதத்தில் அளிக்கப்பட்ட தளர்வுகளின் போது கிராமங்களில் பொதுமக்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை மீறி நடைபெற்ற திருமணம், துக்க நிகழ்ச்சிகளில் அதிகளவிலான நபர்கள் பங்கேற்றதால் கொரோனா தொற்று வேகமெடுத்தது.

அதன் பின்  திருமண நிகழ்ச்சிகளில் 50 பேர் மட்டுமே பங்கேற்க வேண்டும். பங்கேற்பவர்கள் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டு தொற்று இல்லை என சான்றிதழ் பெற்று கலெக்டரிடம் அனுமதி பெற வேண்டும். துக்க நிகழ்ச்சிகளில் 20 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். தேவையற்ற கூட்டம் கூடாது என பல்ேவறு கட்டுபாடுகளை விதித்தது.

கிராமப்புறங்களில் தொற்று குறைந்தது. இந்தசூழலில் மீண்டும் கிராமங்களில் ெபாதுமக்கள் விதிமுறைகளை பின்பற்றாமல் நிகழ்ச்சிகளை நடத்தி வருவதால் தொற்று அதிகரிக்க துவங்கியுள்ளது. இதனிடையே குன்னூர் அருகேயுள்ள காட்டேரி டேம் பகுதியில் கொரோனா தொற்று அதிகம் உள்ளதால், இக்கிராமம் வழியாக செல்லும் சாலையில் தடுப்புகள் ஏற்படுத்தி அடைத்துள்ளனர். இதனால் செலவிப்நகர், கோலனிமட்டம் பகுதிகளில் வசிக்கும் மக்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சாலையில் உள்ள தடுப்பை அகற்றுமாறு வலியுறுத்தினால், மாற்று வழியில் செல்லுமாறு வற்புறுத்துகின்றனர். ஒரு கி.மீ., தூரத்தில் உள்ள கிராமத்திற்கு, சுமார் 8 கி.மீ., தூரம் சுற்றி செல்ல வேண்டிய அவல நிலை நீடிக்கிறது.

செலவிப்நகர், கோலனிமட்டம் பகுதிகளில் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் காய்கறி தோட்டங்களுக்கு கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். மேற்கண்ட பகுதிக்கு பஸ் வசதி இல்லாத நிலையில் நடந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் சாலையில் தடுப்பு அமைத்து வேறு வழியாக செல்லுமாறு கூறுவதால் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். ஆனால் காட்டேரி டேம் பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.

இதுகுறித்து விஏஒ.,விடம் தெரிவித்தால் சாலை பேரூராட்சி கட்டுபாட்டில் உள்ளது அங்கு சென்று கேட்டுமாறு தெரிவிக்கிறார். பேரூராட்சியிடம் கேட்டால் விஏஒ.,விடம் கேளுங்கள் எனவும் கேட்கின்றனர். சாலை மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். நாங்கள் ஏழை எளிய மக்கள் என்பதால் நவீன தீண்டாமை கடைபிடிக்கப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் தலையீட்டு சாலையில் ஏற்படுத்தப்பட்டுள்ள தடுப்பை அகற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : road ,blocking ,Coonoor ,corona , Coonoor: The road was blocked in the vampire dam area near Coonoor, claiming that the corona would spread.
× RELATED நீலகிரி அதிமுக அலுவலகம், வேட்பாளர் காரில் சோதனை