மகாளய அமாவாசை பேரூர் படித்துறையில் தடையை மீறி குவிந்த மக்கள் - முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்

கோவை: மகாளய அமாவாசையொட்டி பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் தடையை மீறி பொதுமக்கள் சமூக இடைவெளியை பின்பற்றாமல் முன்னோர்களுக்கு திதி கொடுத்தனர்.  கோவை மாவட்டம் பேரூர் பட்டீஸ்வரர் கோயில் படித்துறையில் ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாத மகாளய அமாவாசை நாளில் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி கொடுப்பது வழக்கம்.

இந்நாளில் ஏராளமான பக்தர்கள் பேரூர் படித்துறையில் கூடுவர். தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பொதுமக்கள் கரையில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, கோயில் நிர்வாகம் பேரூர் பட்டீஸ்வரர் கோயிலில் தர்ப்பணம் உள்ளிட்ட சடங்குகளை செய்ய தடை விதித்தது.

ஆனால் நேற்று பேரூர் கோயிலில் அதிகாலை முதல் பக்தர்கள் குவிந்தனர். பின்னர், அவர்கள் தடை விதிக்கப்பட்டிருந்த பேரூர் படித்துறைக்கு சென்று முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு செய்தனர். 500க்கும் மேற்பட்டவர்கள் ஒரே இடத்தில் சமூக இடைவெளியை பின்பற்றாமல் கூடி திதி அளித்தனர். இது அதிகாரிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மக்களை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்ைல.

போலீசார் இருந்தும் பயனில்லை.

இதனால் பொதுமக்கள் பட்டீஸ்வரர் கோயிலுக்குள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். தடையை மீறி படித்துறையில் குவிந்த பொதுமக்கள் காரணமாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கொரோனா தொற்று அதிகரிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.

Related Stories:

>