×

திருத்தணி பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை

திருத்தணி: திருத்தணி மற்றும் திருவாலங்காடு ஒன்றியங்களில் மொத்தம், 74 வருவாய் கிராமங்கள் உள்ளன. இப்பகுதி பொதுமக்கள் தங்கள் நிலங்களை பரிமாற்றம் செய்வது பிறப்பு, இறப்புச் சான்று பெறுவது திருமணப் பதிவு வீட்டு மனைகள் பத்திரப்பதிவு, பொதுஅதிகாரப் பத்திரம், தானம் உயில், பாகப்பிரிவினை உள்ளிட்ட பல்வேறு பதிவுகள் திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்தில் செய்யப் படுகிறது.  அங்குள்ள அதிகாரிகள் பொதுமக்களிடம் ஒவ்வொரு பதிவிற்கும் ஒவ்வொரு கட்டணம் நிர்ணயம் செய்து லஞ்சமாக பெறுவதும், முறைகேடாக பத்திரப்பதிவு செய்வதாக தொடர் புகார்கள் திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீசாருக்கு வந்தது.

மேலும் அங்கீகாரம் இல்லாத வீட்டுமனைகள் பதிவு செய்து அதற்கு கணிசமான லஞ்சம் பெறுவதாகவும் புகார்கள் இருந்தன.  இந்நிலையில் நேற்று திருவள்ளூர் லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி  குமரவேல், இன்ஸ்பெக்டர் சுமித்ரா, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை மற்றும் போலீசார் திடீரென நேற்று மாலை 6:00 மணிக்கு திருத்தணி சார்பதிவாளர் அலுவலகத்திற்குச் சென்று அலுவலகத்தை பூட்டி விட்டு உள்ளே சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கணக்கில் வராத பணம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் இங்கே பணிபுரிந்த ஊழியர்களிடம் தொடர் விசாரணை செய்து வருகின்றனர்   இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறும்போது சார்பதிவாளர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் ஒவ்வொரு பதிவிற்கும் ஒவ்வொருவித கட்டணம் கட்டாயமாக வசூல் செய்வதாக கூறப்படுகிறது.

பத்திரப்பதிவு கட்டணம் ஆன்லைன் மூலமே செலுத்தப்படுகிறது. ஆனால் பதிவு எழுத்தர் அலுவலக செலவு என்று கூறி ஒவ்வொரு விதமான பதிவுகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயம் செய்து பொதுமக்களிடம் கட்டாயமாக வசூலித்து அதிகாரிகளுக்கு  வழங்கி வருவதாக புகார் கூறுகின்றனர். எனவே இனிவரும் காலங்களில் சம்பந்தப்பட்ட விற்பனையாளர்கள் பதிவுதாரர்கள் மட்டுமே அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்பட வேண்டும் வலியுறுத்துகின்றனர்.

Tags : Thiruvananthapuram , Thiruthani Registration office, police vigilance
× RELATED கேரளாவில் அடுக்குமாடி குடியிருப்பில்...