×

பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் முகக்கவசம் இன்றி சுற்றி திரிந்தவர்களுக்கு அபராதம்

பள்ளிப்பட்டு:  பொதட்டூர்பேட்டை பேரூராட்சியில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு மற்றும் கொரோனா பரிசோதனை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், நேற்று  பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஏ.வில்லியம் ஜேசுதாஸ்  பேருந்து நிலையம் உட்பட முக்கிய பகுதிகளில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது முக்கவசம், சமூக இடைவெளி இன்றி சுற்றித்திரிந்த பொதுமக்களிடமிருந்து 10,100 அபராதம் வசூல் செய்து கொரோனா தடுப்பு குறித்து விழிப்புணார்வு ஏற்படுத்தினார். மேலும், கொரோனா சிறப்பு மருத்துவ முகாமை பார்வையிட்டு சளி, காய்ச்சல், இருமல் இருந்தால் உடனடியாக பரிசோதனை செய்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அப்போது, இளநிலை உதவியாளர்கள் பாலாஜி, ஜெய்சங்கர், குப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.Tags : municipality , Penalty for wandering around without a mask in the municipality of Pottaturpet
× RELATED வராக நதியில் குப்பை கொட்டினால் அபராதம்