×

மதநூல் பார்சல் வந்த விவகாரம்: அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ 8 மணி நேரம் விசாரணை

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம்  அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் கேரள  உயர்கல்வித்துறை அமைச்சர்  ஜலீலிடம் நேற்று என்ஐஏ அதிகாரிகள் 8 மணி நேரம் விசாரணை நடத்தினர். இது  கேரள அரசில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருவனந்தபுரத்தில் உள்ள  அமீரக தூதரகம் மூலம் தங்கம் கடத்தப்பட்டது தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ,  மத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு  வருகின்றனர். தூதரகம் வழியாக துபாயில் இருந்து இஸ்லாமிய மதநூர் கொண்டு வரப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால்,  அந்த பார்சலில் தங்கம், வெளிநாட்டு கரன்சி வந்திருக்கலாம் என்ற சந்தேகம்  ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக கேரள வெளியுறவு துறை அமைச்சர் ஜலீலிடம் 2 முறை  மத்திய அமலாக்கத்துறை விசாரணை நடத்தி உள்ளது.

விசாரணையில் அவர்  அளித்த விவரங்களை சுங்க இலாகாவும், என்ஐஏவும் பரிசோதித்தபாேது  பல முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, எந்த நேரத்திலும்  அமைச்சர் ஜலீலிடம் என்ஐஏ விசாரணை நடத்தும் என கூறப்பட்டது.  இந்நிலையில் நேற்று விசாரணைக்கு ஆஜராக ேநாட்டீஸ் கொடுக்கப்பட்டது. இதையடுத்து  திருவனந்தபுரத்தில் இருந்த அமைச்சர் ஜலீல் உடனடியாக கொச்சிக்கு விரைந்தார்.  காலை 9.30 மணிக்கு ஆஜராக கூறப்பட்டிருந்தது. ஆனால் அவர் காலை 6.30 மணிக்கே  என்ஐஏ அலுவலகம் சென்றுவிட்டார். 9.30 மணியளவில் அவரிடம் விசாரணை  தொடங்கியது. ெதாடர்ந்து, 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

ஏற்கனவே  அமலாக்கத்துறை விசாரணை நடத்தியதால் கடந்த 4 நாட்களுக்கு மேலாக அமைச்சர்  ஜலீல் பதவி விலக கோரி காங்கிரஸ், பா.ஜா உள்பட எதிர்கட்சியினர் போராட்டத்தில்  ஈடுபட்டு வருகின்றனர். கேரளா முழுவதும் இந்த போராட்டம்  தீவிரம் அடைந்துள்ளது.

தடியடியில் 100 பேர் காயம்
அமைச்சர் ஜலீல் பதவி விலகக் கோரி நேற்றும் அனைத்து மாவட்டங்களிலும் காங்கிரஸ், பா.ஜ, முஸ்லிம் லீக் உட்பட எதிர்க்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல இடங்களில் போலீசாரும், போராட்டக்காரர்களும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். பாலக்காட்டில் போலீஸ் நடத்திய தடியடியில் காங்கிரஸ் எம்எல்ஏ பல்ராம் உள்பட பலர் காயமடைந்தனர். மாநிலம் முழுவதும் நடந்த இந்த போராட்டத்தில் தடியடி, கல்வீச்சில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

Tags : Jaleel ,NIA , NIA interrogates Minister Jaleel for 8 hours
× RELATED ஊரை சுற்றிக் காட்டுவதாக கூறி மனநலம்...