×

பெரியார் பிறந்தநாள் விழா: அனைத்து கட்சியினர் மரியாதை

காஞ்சிபுரம்: பெரியாரின் 142-வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி காஞ்சிபுரம் கங்கைகொண்டான் மண்டபம் பகுதியில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் மாவட்ட திராவிடர் கழக மாவட்டத் தலைவர் அசோகன் தலைமையில் நிர்வாகி கதிரவன் உள்பட ஏராளமானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். காஞ்சிபுரம் நகர திமுக சார்பில், காஞ்சி தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் எம்எல்ஏ வக்கீல் எழிலரசன், மாவட்ட அவைத்தலைவர் சேகரன், நகர செயலாளர் சன்பிராண்ட் ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அதிமுக அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் கணேசன் தலைமையில், முன்னாள் எம்எல்ஏ மைதிலி திருநாவுக்கரசு, மாவட்ட எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் ஆர்.வி,ரஞ்சித்குமார், முன்னாள் எம்பி காஞ்சி பன்னீர்செல்வம் உள்பட  பலர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக மாவட்ட செயலாளர் வளையாபதி தலைமையில், நகர செயலாளர் மகேஷ், நெசவாளர் அணி ஏகாம்பரம், நிர்வாகிகள் எம்.ஜி.அருள், வெங்கடேசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒருங்கிணைப்பாளர் பாசறை செல்வராஜ் தலைமையில் நிர்வாகிகள் திருமாதாசன், டேவிட், மதி ஆதவன், தேமுதிக நகர செயலாளர் சாட்சி சண்முக சுந்தரம் தலைமையில் நிர்வாகிகள் குமார், வனஜா உள்பட பலர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றிய திமுக சார்பில் பேரூராட்சி வளாகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு எம்எல்ஏ இதயவர்மன், தெற்கு ஒன்றிய செயலாளர் பையனூர் சேகர், வடக்கு மாவட்ட துணைச் செயலாளர் ஜி.சி. அன்புச்செழியன், திருப்போரூர் நகர செயலாளர் தேவராஜ் உள்பட பலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திருப்போரூர் ஒன்றிய, நகர அதிமுக சார்பில் வடக்கு ஒன்றிய செயலாளர் குமரவேல், தெற்கு ஒன்றிய செயலாளர் நந்தகுமார், நகர செயலாளர் ஜி.முத்து, ஒன்றிய இளைஞர் அணி செயலாளர் ஆனந்தன், வழக்கறிஞர் சிவராமன், கூட்டுறவு வங்கி தலைவர் மோகன் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

திருப்போரூர் வடக்கு ஒன்றிய மதிமுக சார்பில் ஒன்றிய செயலாளர் லோகு தலைமையில், நகர செயலாளர் துரை, இளைஞர் அணி அமைப்பாளர் சம்சுதீன், இலக்கிய அணி அம்பிகாபதி, அமமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கோதண்டபாணி, ஒன்றிய செயலாளர் முட்டுக்காடு முனுசாமி, வெண்பேடு வேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் லிங்கம் உள்பட பலர் மாலை அணிவித்தனர்.

Tags : Periyar Birthday Celebration ,parties , Periyar Birthday Celebration: Respect to all parties
× RELATED இந்தியா கூட்டணி கட்சிகள் கலந்தாலோசனை...