×

பம்ப் ஆபரேட்டருக்கு சரமாரி வெட்டு மர்மநபர்களுக்கு வலை

கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் ஊராட்சி ஓட்டேரி விரிவு பகுதி டிஎஸ் நகரை சேர்ந்தவர் கார்த்திக் (32). வண்டலூர் ஊராட்சியில் பம்ப் ஆபரேட்டராக பணியாற்றுகிறார். இவரது மனைவி கற்பகம் (25). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். நேற்று அதிகாலையில் கார்த்திக், வழக்கம்போல் குடிநீர் தொட்டியில் தண்ணீர் ஏற்றிவிட்டு சாலையில் நடந்து சென்றார். அப்போது அவரை வழிமறித்த 3 பேர்,  மறைத்து வைத்திருந்த விச்சரிவாளால் கார்த்திக்கை சரமாரியாக வெட்டினர். அவரது அலறல் சத்தம் கேட்டு, பொதுமக்கள் ஓடி வந்தனர். இதை கண்டதும், மர்மநபர்கள் பைக்கில் தப்பிவிட்டனர். புகரின்படி ஓட்டேரி போலீசார் வழக்குப்பதிந்து  மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

Tags : operator , Web for volleyball cut mystery to pump operator
× RELATED வனச்சரக ஊழியரின் பைக்கை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலை