×

3 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படைக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடந்த சண்டையில் 3 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் காஷ்மீரில் ஊடுருவி தாக்குதல் நடத்துவது அதிகமாகி வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 10க்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை பாதுகாப்பு படைகள் சுட்டுக் கொன்றுள்ளன.  இந்நிலையில், நகர் அருகே பாட்டமாலுவில் உள்ள பிர்தோசாபாத் என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படைக்கு நேற்று முன்தினம் இரவு ரகசிய தகவல் கிடைத்தது.

உடனே, அப்பகுதியை பாதுகாப்பு படைகள் சுற்றி வளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டன. அப்போது, அங்கு பதுங்கி இருந்த தீவிரவாதிகள், வீரர்களை நோக்கி சுட்டனர், அதற்கு வீரர்களும் பதிலடி கொடுத்தனர். இதில், 3 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சண்டையின் போது தீவிரவாதிகளால் சுடப்பட்ட குண்டு பாய்ந்து, அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் பரிதாபமாக இறந்தார். மேலும், பாதுகாப்பு படையை சேர்ந்த ஒரு அதிகாரியும், 2 வீரர்களும் காயமடைந்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.


Tags : militants , 3 militants shot dead
× RELATED இந்தியாவிற்குள் நுழைய எல்லையில் 300...