×

மத்திய அமைச்சர் பிரகலாத்துக்கும் கொரோனா உறுதி

போபால்: மத்தியப் பிரதேச மாநிலம், டாமோ மக்களவை தொகுதி எம்பி.யும், மத்திய கலாசாரத் துறை அமைச்சருமான பிரகலாத் படேலுக்கு கொரோனா நோய் தொற்று அறிகுறிகள் தென்பட்டன. இதையடுத்து, அவர் பரிசோதனை செய்து கொண்டார். இதன் முடிவு நேற்று முன்தினம் இரவு வந்தது. இதில், அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இது குறித்து பிரகலாத் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், ‘எனக்கு கொரோனா நோய் தொற்று இருப்பதாக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு பாதுகாப்பாக இருங்கள்,’ என குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக மத்திய அமைச்சர் அமித் ஷா, நிதின் கட்கரி உட்பட 8 அமைச்சர்கள் ஏற்கனவே கொரோனா நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு, இவர்களில் ஒரு சிலர் குணமாகி விட்டனர். அமித்ஷா குணமாகி விட்ட போதிலும், பாதிப்புக்கு பிந்தைய உபாதைகளால் அவஸ்தை பட்டு வருகிறார். அதற்காக, சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.



Tags : Corona ,Prakash , Corona also assured Union Minister Prakash
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...