×

மருத்துவமனையில் இருந்து கொலை குற்றவாளி தப்பி ஓட்டம்

அண்ணாநகர்: கோயம்பேட்டில் கடந்த 2018ம் ஆண்டு ரவுடி சுந்தர் (22) கொலை வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவாக இருந்த  முக்கிய குற்றவாளியான மதுரை மாவட்டத்தை சேர்ந்த ரவுடி சொரி (எ) வேல்ராஜை (44) நேற்று முன்தினம் கோயம்பேடு போலீசார் கைது செய்தனர்.  அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு முன், மருத்துவ  பரிசோதனை செய்ய, நேற்று முன்தினம் மாலை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு தலைைம காவலர் சரவணன் அழைத்து சென்றார். அங்கு, தலைமை காவலரை கீழே தள்ளிவிட்டு,  வேல்ராஜ் தப்பி ஓடிவிட்டார். இதுகுறித்து கோயம்பேடு போலீசில் தலைமை காவலர் சரவணன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான ரவுடி வேல்ராஜை தேடி வருகின்றனர்.Tags : murder convict ,hospital , The murder convict fled the hospital
× RELATED கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னை...