×

மூன்று மாதம் 3வது சனிக்கிழமை மட்டும் ரேஷன் கடை ஊழியர்களுக்கு விடுமுறை

சென்னை: கொரோனா தொற்று காரணமாக 3 நாட்கள் பணியில் ஈடுபட்ட ரேஷன் கடை ஊழியர்களுக்கு 3 நாட்கள் விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை ஆணையர் சஜ்ஜன்சிங்ரா சவான், அனைத்து மண்டல உதவி ஆணையர்கள் மற்றும் அனைத்து மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறி இருப்பதாவது: தமிழகத்தில் உள்ள பொது விநியோக திட்ட நியாயவிலை கடைகளில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வீடு தோறும் சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்கினார்கள். விடுமுறை நாட்களான 10.7.2020, 7.8.2020 மற்றும் 4.9.2020 ஆகிய நாட்கள் அவர்களுக்கு பணி நாட்களாக அறிவிக்கப்பட்டது. இந்த மூன்று விடுமுறை நாட்களில் வேலை நாட்களாக செயல்பட்டதற்கு பதில் வருகிற 19ம் தேதி (நாளை), 17.10.2020 மற்றும் 21.11.2020 ஆகிய மூன்று நாட்கள் (மூன்றாவது சனிக்கிழமை) நியாயவிலை கடைகளுக்கு விடுமுறை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.

Tags : Holidays ,ration shop employees , Holidays for ration shop employees only on the 3rd Saturday of the three months
× RELATED தொடர் விடுமுறை இருந்தும் சுற்றுலா...