×

கோயிலுக்கு செல்ல தடை போலீசாரை தாக்கிய சென்னையை சேர்ந்த 3 பேர் கைது

மேல்மலையனூர்: விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோயிலில் மகாளய அமாவாசையான நேற்று ஊஞ்சல் உற்வம் நடந்தது. இந்நிலையில் மேல்மலையனூர் ஈங்குனம் பிரிவு சாலையில் காரில் வந்த 4 பேரை ஏட்டு அய்யனார் (45), போலீஸ்காரர் அய்யனார் (32) ஆகியோர் தடுத்தனர். போதையில் இருந்த 4 பேரும் போலீசாரை சரமாரியாக தாக்கினர். இதையடுத்து போலீசாரை தாக்கிய சென்னை திருமுல்லைவாயலை சேர்ந்த ராஜேந்திரன் (38), அயப்பாக்கத்தை சேர்ந்த சேட்டு (46), மேல்மலையனூர் இளங்கோ (35) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

Tags : Chennai , 3 arrested from Chennai for assaulting police
× RELATED சென்னை காவல்துறையின் தொன்மையை...