×

கடன் தொல்லையால் கணவர் மாயம் மகளுக்கு விஷம் கொடுத்து கொலை: தாய் தற்கொலை

வாலாஜா: கடன் தொல்லையால் கணவர் மாயமானதால் மன வேதனை அடைந்த பெண், மகளுக்கு விஷம் கொடுத்து கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார். ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா தேசாய் செட்டி தெருவை சேர்ந்தவர் சரவணபிரசாத் (40). இவர் அதேபகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி புஷ்பராணி (35). இவர்களது மகள் தர்ஷிணி(7). ராணிப்பேட்டையில் உள்ள தனியார் பள்ளியில் 2ம் வகுப்பு படித்து வந்தாள்.
கடன் தொல்லை காரணமாக கடந்த 2நாட்களுக்கு முன்பு சரவணபிரசாத் திடீரென்று மாயமானார்.

குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால், புஷ்பராணி மனஉளைச்சலில் இருந்துள்ளார். இதையடுத்து, நேற்று முன்தினம் அவர் மகளுக்கு விஷம் கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார். இதில் இருவரும் மயங்கி விழுந்தனர். அக்கம்பக்கத்தினர், இருவரையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி இருவரும் நேற்று இறந்தனர். இதுகுறித்து வாலாஜா போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Tags : death ,suicide , Debt-ridden husband poisons daughter to death: mother commits suicide
× RELATED வேப்பூர் அருகே திருமணமான 45 நாளில் இளம்பெண் மர்ம சாவு கணவர் அதிரடி கைது