சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் இடிந்த மின்மோட்டார் அறையை அகற்ற கோரிக்கை

சிவகாசி: சிவகாசி அருகே ஆனைக்குட்டம் கிராமத்தில் அபாய நிலையில் உள்ள மின்மோட்டார் அறையை அகற்ற வேண்டும் என்று கிராமம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சிவகாசி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனைக்குட்டம் கிராமத்தில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மக்கள்தொகைக்கு ஏற்ப இந்த கிராமத்தில் போதிய அடிப்படை வசதிகள் இல்லை. வாறுகால், சுகாதார வளாகம், சாலை வசதிகளில் இந்த கிராமம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து தேர்தலுக்கு பிறகாவது விடிவு காலம் பிறக்கும் என்ற நினைத்த கிராம மக்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

கிராமத்தின் மேற்கு பகுதியில் குடிநீர் மின்மோட்டார் அறை உள்ளது. இந்த கட்டடம் இடிந்து சாய்ந்த நிலையில் உள்ளது. எந்த நேரத்திலும் சாய்ந்து விழும் அபாயம் உள்ளது. இதனை அகற்ற வேண்டும் என அதிகாரிகளிடம் கிராம மக்கள் பலமுறை புகார் கூறியும் நடவடிக்கை இல்லை. மின்மோட்டார் அறை வழியாக நடந்து செல்லும் மக்கள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர். விபத்து ஏற்படும் முன் மின்மோட்டார் அறையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>