×

இந்தியாவில் 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும்..!! அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை

டெல்லி: இந்தியாவில் 2021ஆம் ஆண்டு துவக்கத்தில் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக அளவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கும் ஆய்வுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தியாவில் மூன்று தடுப்பூசிகள் பரிசோதனையில் உள்ளன. அதில் கோவாக்சின் முழுக்க முழுக்க இந்தியாவால் உருவாக்கப்பட்டது.

ஐ.சி.எம்.ஆர்., மற்றும் தேசிய வைராலஜி நிறுவனத்துடன் இணைந்து ஐதராபாத்தின் பாரத் பையோடெக் உருவாக்கியுள்ளது. தற்போது இது 2ம் கட்ட மனித சோதனையில் உள்ளது. இந்தியாவில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தினமும் உயர்ந்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு மருந்து விரைவில் கண்டுபிடிக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது. இந்நிலையில், “இந்தியாவுக்கு 2021 முதல் பாதிக்குள் கொரோனா தடுப்பூசி கிடைக்கக்கூடும்” என, மத்திய சுகாதார துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன், “மற்ற நாடுகளைப் போலவே இந்தியாவும் கொரோனா தடுப்பூசியை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. தற்போது மூன்று தடுப்பூசி வகைகள் பரிசோதனையின் வெவ்வேறு கட்டங்களில் உள்ளன. பிரதமரின் வழிகாட்டுதலின் கீழ், ஒரு நிபுணர் குழு அதைப் பரிசோதித்துக் கொண்டிருக்கிறது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இந்தியாவில் ஒரு தடுப்பூசி கிடைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” என்று அவர் தெரிவித்தார்.

Tags : Corona ,Harshavardhan ,India , Corona vaccine will be available in India by the beginning of 2021 .. !! Minister Harshavardhan is confident
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...