எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து அமித்ஷா டிஸ்சார்ஜ்..!! சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடந்த ஆகஸ்ட் 2ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் ஆகஸ்ட் 14ம் தேதி எடுத்த கொரோனா பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்று முடிவு வந்ததால் அவர் வீடு திரும்பினார். இருப்பினும் அவருக்கு மீண்டும் உடல்நல பாதிப்பு ஏற்பட்டதால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமித்ஷா வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கடந்த 13 ஆம் தேதி மீண்டும் மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவ பரிசோதனைக்காக அமித்ஷா அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும், சில நாட்கள் மருத்துவமனையிலே அவர் சிகிச்சை பெறுவார் என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று மாலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். அவரை சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Related Stories:

>