×

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ்

டெல்லி: டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஆகஸ்ட் 14-ம் தேதி கொரோனா தொற்றில் இருந்து மீண்ட அமித்ஷா உடல்நல பாதிப்பு காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி அமித்ஷா வீடு திரும்பினார். வீட்டில் இருந்த அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் மீண்டும் 13-ம் தேதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சிகிச்சை முடிந்து இந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். மேலும் சில நாட்கள் வீட்டிலேயே ஓய்வெடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.

Tags : Amit Shah ,Delhi Aims Hospital , Home Minister Amit Shah discharged after being admitted to Delhi Aims Hospital
× RELATED ஜம்மு – காஷ்மீரில் செப்டம்பருக்குள்...